என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சோனியா காந்தி"
- மாநிலங்களவை தலைவர் அதிகார தொனியில் பேசியதால் ஜெயா பச்சன் கடுங்கோபம்.
- மாநிலங்களவை தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
இந்த கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சில பாஜக எம்.பி.க்கள் ஜெய பச்சன் என்பதற்கு பதிலாக ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைத்தனர். இவ்வாறு தன்னை அழைப்பதற்கு ஜெயா பச்சனுக்கு உடன்பாடு இல்லை.
தன்னை ஜெயா பச்சன் என்று அழைத்தால் போதும், ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சொந்த சாதனைகள் படைக்காத பெண்களுக்குதான் கணவர் பெயரால் அங்கீகாரம் தேவை. அதனால் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
இருந்தபோதிலும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டவர்கள் ஜெயா அமிதாப் பச்சன் என்றே அழைத்து வந்தனர். இன்றும் அதுபோல் அழைக்கப்பட்டதால் ஜெயா பச்சன் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால், ஜெக்தீப் தன்கர் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என்ற தொனியில் பதில் அளித்தார்.
#WATCH | On her exchange of words with Rajya Sabha Chairman Jagdeep Dhankhar, Samajwadi Party MP Jaya Bachchan says, "...I objected to the tone used by the Chair. We are not school children. Some of us are senior citizens. I was upset with the tone and especially when the Leader… pic.twitter.com/rh8F35pHsM
— ANI (@ANI) August 9, 2024
இதனால் ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய பச்சன் கடும் வாக்குவாதம் செய்தார். மாநிலங்களவை தலைவரிடம் இருந்து எனக்கு மன்னிப்பு தேவை என்றார். ஜெயா பச்சனுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். பின்னர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த ஜெயாபச்சன் கூறுகையில் "ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. தொல்லை கொடுப்பது போன்ற வார்தைகள். நீங்கள் பிரபலங்களாக (celebrity) இருக்கலாம். ஆனால் எனக்கு கவலை இல்லை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களை கவலைப்பட வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் இப்போது பேசுவதுபோல் யாரும் பேசியதில்லை. இது பெண்களுக்கு மிகவும் அவமரியாதை" இவ்வாறு ஜெயா பச்சன் தெரிவித்தார்.
- நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
- 'வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது'
கடந்த ஜூலை [ஜூன் 27] ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மக்களவையில் ராகுல் காந்தியின் உரை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் இடையிலான கருத்து மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கூட்டத்தொடரின் ஆரம்ப கூட்டங்களில் தான் பேசும்போது ஜெகதீப் தன்கர் மைக்கை ஆப் செய்வதாக கார்கே பல முறை குற்றம்சாட்டினார். ஆனால் மைக்கின் கண்ட்ரோல் தன்னிடம் இல்லை என்று ஜெகதீப் விளக்கம் அளித்தார். நேற்று முன் தினம் இருவருக்கும் இடையில் சற்று இணக்கம் ஏற்பட்டு அவை கலகலப்பாக இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
நேற்று மாநிலங்களவையில், காங்கிரஸ் எம். பி பிரமோத் திவாரி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசியபோது, ஆளும் பாஜக பல வழிகளில் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சாடினார். இந்த கருத்தை கண்டித்த ஜெகதீப் தன்கர், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது என்று தெரிவித்தார். உடனே எழுந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ், அதை [துரோகத்தை] எங்களால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்தார். இதனால் பொறுமை இழந்த ஜெகதீப் தன்கர், ஜெயராம் ரமேஷை பார்த்து, நீங்கள் மிகவும் புத்திசாலி, திறமை வாய்ந்தவனர், நீங்கள் உடனே வந்து எதிர்கட்சித் தலைவர் கார்கேவின் இடத்தில் அமர்ந்து அவரது வேலையே நீங்களே பார்க்கலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.
ஜெகதீப் தன்கரின் கருத்தை கண்டிக்கும் வகையில் கார்கே உடனே எழுந்து, வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது, எனவே தான் ஜெயராம் ரமேஷை புத்திசாலி என்று தெரிவிப்பதன்மூலம் தலித் ஆகிய நான் மந்தமான நபர் என்றும் அவர் எனக்கு பதில் இங்கு வந்து அமர வேண்டும் என்றும் கூறுகிறீர்கள் என்று காட்டமாக ஜெகதீப் தன்கரிடம் தெரிவித்தார்.
இதனால் சற்று கலக்கமடைந்த தன்கர், நான் அப்படி கூறவில்லை, எனது கருத்தை நீங்கள் திரித்துக் தவறாக எடுத்துகொண்டீர்கள், உங்கள் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. நீங்கள் இருக்கும்போது ஜெயராம் ரமேஷ் ஏன் பேச வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு சொன்னேன், நீங்கள் சில பிரச்னைகளை தீர்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கார்கே, என்னை உருவாகியவர் இங்கு உள்ளார் [சோனியா காந்தியை சுட்டிக்காட்டி] மேலும் மக்கள் என்னை உருவாக்கியவர்கள். நீங்களோ ஜெய்ராம் ரமேஷோ என்னை உருவாக்கவில்லை என்று தெரிவித்தார்.
- பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை இந்திய மக்கள் நிராகரித்து விட்டனர்.
- எமர்ஜென்சி விவகாரத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு, பாரபட்சம் கொண்டதாகவும், அரசியலாகவும் இருந்தது.
புதுடெல்லி:
காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தனியார் செய்தி நிறுவனத்துக்கு எழுதிய கட்டுரையில் கூறியதாவது:
பிரிவினைவாதம் மற்றும் வெறுப்பு அரசியலை இந்திய மக்கள் நிராகரித்து விட்டனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
பாராளுமன்ற தேர்தல் தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் எதுவும் மாறாதது போல் அவர் தொடர்கிறார்.
பிரச்சாரத்தின் போது தனக்கு தெய்வீக அந்தஸ்தை வழங்கிய ஒரு பிரதமருக்கு இது தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியைக் குறிக்கிறது.
எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்ட விவகாரம் பிரதமராலும், அவரது கட்சியினராலும் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டதாகவும், இவ்விஷயத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு, பாரபட்சம் கொண்டதாகவும், அரசியலாகவும் இருந்தது.
எமர்ஜென்சி பிரகடனத்தை அடுத்து நடந்த தேர்தலில் 1977, மார்ச்சில் நம் நாட்டு மக்கள் ஒரு திட்டவட்டமான தீர்ப்பை வழங்கினர். அந்தத் தீர்ப்பு தயக்கமின்றி, சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்பின், 3 ஆண்டுக்குள் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தேர்தல் வெற்றியைப் பெற்றது. அதுபோன்ற ஒரு வெற்றியை மோடி மற்றும் அவரது கட்சி ஒருபோதும் பெற்றதில்லை. இவையெல்லாம் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.
நாடுமுழுவதும் பல குடும்பங்களை அழித்த வினாத்தாள் கசிவு குறித்து மத்திய அரசு மௌனமாக உள்ளது. மக்கள் பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பும். பிரதமரும் அவரது அரசாங்கமும் சாதகமாக பதிலளிப்பார்கள் என நம்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளில் என்.சி.இ.ஆர்.டி, யு.ஜி.சி. போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் தொழில்முறை ஆழமாக சேதமடைந்துள்ளது.
எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் பாராளுமன்றத்தில் சமநிலை மற்றும் செயல்திறனை மீட்டெடுக்க உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்தார்.
- பாராளுமன்ற குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்களை இரு அவைகளிலும் வழி நடத்துவார்.
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த விருந்தில் கலந்து கொண்டோம்.
கன்னியாகுமரி
விஜய்வசந்த் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
அன்னை சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்களை இரு அவைகளிலும் வழி நடத்துவார். அவரது ஆளுமை மிகுந்த தலைமை மக்களின் குரலை பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்ய எங்களுக்கு ஊக்கம் அளிக்கும். நன்றி அன்னை அவர்களே என்று கூறியுள்ளார்.
அன்னை சோனியா காந்தி அவர்கள் புதிதாக வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த விருந்தில் கலந்து கொண்டோம். தலைவர் ராகுல் காந்தி, திருமதி பிரியங்கா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழ் நாடு பொறுப்பாளர் திரு அஜோய் குமார், மாநில தலைவர் திரு செல்வ பெருந்தகை மற்றும் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர் என்றும் கூறியுள்ளார்.
- அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோல்வியை சந்தித்துள்ளார்.
- உண்மையில், ஆட்சி அமைப்பதற்கான உரிமையை மோடி இழந்துவிட்டார்.
பழைய பாராளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தியை மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார்.
இந்நிலையில், கூட்டத்தில் தோல்விக்கான பொறுப்பை சற்றும் ஏற்காமல் நாளை பிரதமராக பதவி ஏற்கவுள்ளார் மோடி என காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " தன்னுடைய பெயரை மட்டுமே முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்ட மோடி, அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோல்வியை சந்தித்துள்ளார்.
உண்மையில், ஆட்சி அமைப்பதற்கான உரிமையை மோடி இழந்துவிட்டார். ஆனால், தோல்விக்கான பொறுப்பை சற்றும் ஏற்காமல் பிரதமராக நாளை பதவி ஏற்கவுள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சோனியா காந்தி தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ளார்.
- மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என தகவல்.
பழைய பாராளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைக் குழுத் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படவுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சோனியா காந்தி தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ளார்.
இதற்கிடையே, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாக உள்ளது.
காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தியை மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார்.
- மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காரியக்கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.
- கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 99 இடங்கள் கிடைத்தன.
கடந்த 2019-ம் ஆண்டு வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, இதன் மூலம் எழுச்சி பெற்றிருக்கிறது. குறிப்பாக கடந்த 2 முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத காங்கிரஸ், இந்த முறை வலிமையான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது.
காங்கிரஸ் அங்கம் வகித்த இந்தியா கூட்டணியும் 230-க்கு மேற்பட்ட தொகுதிகளை பெற்று சாதித்து உள்ளது.
முந்தைய 2 தேர்தல்களில் கிடைத்த தோல்வியால் துவண்டு போன காங்கிரசாருக்கு இது மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.
இந்த சூழலில் காங்கிரஸ் காரியக்கமிட்டி நாளை (சனிக்கிழமை) டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடுகிறது.
கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காரியக்கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.
குறிப்பாக கட்சி சாதித்த இடங்கள், சறுக்கிய பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் புதிய ஆட்சியில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் மற்றும் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350-க்கு மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என தகவல்.
- மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பிடிக்க வாய்ப்பே இல்லை- எதிர்க்கட்சிகள்.
பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. இதில் அனைத்து நிறுவனங்களும் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளை தாண்டாது என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்து வந்தார்கள். இதனால்தான் ஜூன் 1-ந்தேதி கார்கே வீட்டில் தலைவர்கள் சந்தித்து பேசினார். அப்போது வெற்றி பெறுவோம் என மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, கர்நாடகா துணை முதல்வர் டிகு சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து கணிப்பை கடுமையாக விமர்சித்துள்ளனர். கருத்து கணிப்பை மீறி 295 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் உன உறுதியாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு எதிராக எங்களுடைய தேர்தல் முடிவுகள் அமையும் என மிகவும் நம்புவதாக தெரிவித்தள்ளார்.
இது தொடர்பாக சோனியா காந்தி கூறுகையில் "நாம் காத்திருக்க வேண்டும். காத்திருந்து பார்ப்போம். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு முற்றிலும் எதிராக எங்களுடைய தேர்தல் முடிவுகள் அமையும் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையாக உள்ளோம்.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
"இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்று அழைக்கக் கூடாது. இது மோடி மீடியா கணிப்பு" என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
- கருணாநிதியின் ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
புதுடெல்லி:
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா, கலைஞர் சிலைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். கலைஞர் படத்திற்கு சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கலைஞரின் படத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வில்சன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறுகையில்,
டாக்டர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பல சந்தர்ப்பங்களில் அவரை சந்தித்து, அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த கொண்டாட்ட நாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரத்திற்கு பாதுகாப்பாக விளங்கிய தலைசிறந்த தலைவர் கருணாநிதி. இங்கு வந்ததில் எனக்கு மிகவும் பெருமையான விஷயம்," என்று தெரிவித்தார்.
#WATCH | Rahul Gandhi says, "...a great leader of Tamil Nadu - somebody who defended the culture, language of the Tamil people. It is an honour for me to come here today." https://t.co/ri2EvDcDnp pic.twitter.com/i3lNbQKJt2
— ANI (@ANI) June 3, 2024
- மாநில அந்தஸ்து வழங்கியதன் மூலம் தெலுங்கானா மக்களின் சுயமரியாதையை சோனியா காந்தி பாதுகாத்துள்ளார்.
- தெலுங்கானா மாநிலத்திற்கு தனி சின்னம் மற்றும் மாநில பாடல் தயார் செய்யப்படுகிறது.
திருப்பதி:
ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆகிறது. வருகிற 2-ந் தேதி தெலுங்கானா மாநில தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தெலுங்கானா அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் 3 நாட்கள் தொடர் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த சோனியா காந்திக்கு பாராட்டு விழா நடத்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. இதற்காக முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெலுங்கானா மாநில அந்தஸ்து வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சோனியா காந்திக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது அழைப்பிற்கு அவர் சாதகமாக பதிலளித்தார்.
பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். மாநில அந்தஸ்து வழங்கியதன் மூலம் தெலுங்கானா மக்களின் சுயமரியாதையை சோனியா காந்தி பாதுகாத்துள்ளார்.
சோனியா காந்திக்கு பாராட்டு விழா பிரஜாலா பலானா பகுதியில் பிரம்மாண்டமாக நடத்தப்படும். இதில் மாநிலம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் கலந்து கொள்வார்கள்.
தெலுங்கானா மாநிலத்திற்கு தனி சின்னம் மற்றும் மாநில பாடல் தயார் செய்யப்படுகிறது. இசையமைப்பாளர் கீரவாணி ஆட்சேபம் தெரிவித்ததால் மற்றொரு இசையமைப்பாளர் மூலம் தெலுங்கானா மாநில பாடல் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில சின்னத்தில் அரசாட்சியின் பிரதிபலிப்பு இருக்காது. சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தெலுங்கானா மக்களின் போராட்ட உணர்வை பிரதிபலிக்கும் வகையில் சின்னம் வடிவமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை.
- "இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மே 27 அன்று தனது 74வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில், இன்று 60வது நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, நேருவை நினைவு கூர்ந்த கார்கே, "நவீன இந்தியாவின் சிற்பி பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஒப்பற்ற பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு சென்றவர். ஜனநாயகத்தின் அர்ப்பணிப்புள்ள பாதுகாவலர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் நமது உத்வேகத்தின் ஆதாரம்" என குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவின் மாணிக்கத்திற்கு" அவரது நினைவுநாளில் எங்கள் பணிவான அஞ்சலி.
பண்டித ஜவஹர்லால் நேரு கூறியது - "நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் முன்னேற்றம், நாட்டின் ஒற்றுமை நமது தேசிய கடமையாகும்.
நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றலாம், வெவ்வேறு மாநிலங்களில் வாழலாம், வெவ்வேறு மொழிகளைப் பேசலாம், ஆனால் அது நமக்குள் ஒரு சுவரை உருவாக்கிவிடக் கூடாது. எல்லா மக்களும் முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகளைப் பெற வேண்டும்.
நம் நாட்டில் சிலர் பெரும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இன்றும் காங்கிரஸ் கட்சியும் அதே நீதியின் பாதையையே பின்பற்றுகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்த தேர்தலில் பல விளையாட்டு பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.
- கவுதம் கம்பீர் டெல்லியில் உள்ள தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய தொகுதிகளில் 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று (மே 25) டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் பல விளையாட்டு பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி வாக்களித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் , கபில்தேவ் ஆகியோர் டெல்லியில் உள்ள தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்